யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பயணிகள் பேருந் துகள் தொடா்ச்சியாக விபத்துக்களில் சிக்கிவரும் நிலையில், உயிாிழப்புக்களும், படு காயங்களும் அன்றாட வழக்கமாகியிருக்கின்றது.இந்நிலையில், மக்கள் என்ன நம்பிக்கையில் பேருந்துகளில் பயணிக்க முடியும்? என சமூக ஆா்வலா்களிடமிருந்து சரமாாியான கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்ற து. யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்­புக்குச் செல்­லும் அதி சொகுசு பேருந்­து­க­ளின் அண்­மைக்­கால விபத்­தால் இது­வரை சுமார் ஐம்­பது பேர் வரை காய­ம­டைந்­துள்­ள­னர். 5 பேர் வரை­யில் உயி­ரி­ழந்­துள்­ள­னர். பல்­வேறு பகு­தி­க­ளி­லும் கொழும்பு பய­ணத்­துக்­கான ஆசன முற் பதி­வு­கள் நடை­பெற்று மாலை 7.30 மணிதொடக்­கம் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்­புக்­கான பய­ணம் ஆரம்­பிக்­கப்­ப­டு­கி­றது.

சொகுசுப் பேருந்து என்ற படி­யால் இல­கு­வாக உட்­கார்ந்­தும் பய­ணி­கள் சார­தியை நம்பியும் தூங்கி விடு­கின்­ற­னர்.ஆனால், கூடிய வேகத்­தால் கடந்த மூன்று மாதங்­க­ளுக்­குள் சுமார் 5 பேருந்­து­கள் பெரும் விபத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளன. 27ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து வீதி­யில் தரித்து நின்ற டிப்­ப­ரு­டன் மோதி பாரிய விபத்­துக்­குள்­ளா­ன­தில் சுமார் 15 பய­ணி­கள் ஆபத்­தான நிலை­யில் கிளி­ நொச்சி மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ ள­னர்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி வவு­னி­யா­வில் இருந்து கொழும்பு நோக்கிப் பய­ ணித்த பேருந்து ஒன்று விபத்­துக்­குள்­ளான­தில் 4 பேர் உயி­ரி­ழந்­த­னர்.அத்­து­டன், மேலும் பலர் படு­கா­யம் அடைந்­துள்­ள­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.மஹ­வெவ, சிலா­பம் பகு­தி­யில் வைத்து பேருந்து மின்­மாற்றி ஒன்­றில் மோதி­ய­தால் இந்த விபத்து நடந்­துள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்­தொன்று ஏ–9 வீதி­யின் மாங்­கு­ளம் பகு­தி­யில் வைத்து வி­பத்­துக் ­குள்­ளாகி­யது. இந்த சம்­ப­வத்­தில் சார­தி­யின் உத­வி­யா­ளர் விபத்து இடம்­பெற்ற இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த நவம்­பர் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்பு நோக்­கிப் பய­ ணித்த சொகுசு பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி, நீரோ­டை­யில் வீழ்ந்து விபத்­துக்குள் ளா­கி­யது.

நாத்­தாண்­டிய வல­ஹப்­பிட்­டிய பகு­தி­யில் இடம் பெற்ற இந்த விபத்­தில் மூன்று பெண்­கள் உயி­ரி­ழந்­த­னர் . மேலும் 19 பேர் காய­ம­டைந்த­னர் .இவ்­வாறு தொடர்ச்­சி­யாக அதி சொகுசு பேருந்­து­கள் விபத்­துக்கு உள்­ளா­வ­தால், யாரை நம்பி பேருந்­தில் பய­ணிப்­பது என்று மக்­கள் கேள்வி எழுப்புகின்­ற­னர்.