வெள்ளி, 5 ஜனவரி, 2024

லண்டன் வாழ்க்கைக்கும் இங்குள்ள வாழ்க்கைக்குமான வித்தியாசம்.!! அதிர்ச்சித் தகவல்!!


மன வேதனையுடன் எழுதுகிறேன் ..உலகில் வேறு நாடுகளில் வாழும் மக்கள் தங்களது அடிப்படைத் தேவையான உணவுத் தேவைக்காக அவர்களின் சம்பளப் பணத்தில் இருந்து மிகச் சிறிய தொகையினையே செலவு செய்கின்றனர். எனக்கு அந்த வித்தியாசம் நன்கு தெரிந்ததனால் இதனை எழுதுகிறேன் கடந்த சில வாரங்களாக இலங்கையில் இரண்டு பொலித்தின் பைகளில் பொருட்களை போட்டுக்கொண்டு 15,000ரூபாய் 20,000 ரூபாய் என பணத்தைச் செலுத்தி வீட்டுக்கு வந்தேன் கீழே உள்ள படத்தில் உள்ளது இன்று நான் லண்டனில் வாழும் வீட்டுக்கு வாங்கி வந்த பொருட்களாகும் அதன் விலையையும் படத்தையும் போட்டு உள்ளேன். ( படத்தை போடுவது என்னை பெரியவராகக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல யதார்த்தத்தை காண்பிக்கத் தான்) எங்கள் வீட்டில் உள்ள 03 பேருக்கு 07 நாளைக்கு இந்த பொருட்கள் போதும் விலை134.67 பவுன் தான் இலங்கைப் பணத்தில் 55 000 ரூபாய் வரை அதாவது இந்த நாட்டில் குறைந்த அளவான சம்பளத்தை பெறும் ஒருவரின் 12 மணி நேர வேலைக்கான சம்பளமாகும். சிறிய ஒரு உதாரணத்தை எழுதுகிறேன் கூலித்தொழிலாளியின் சாதாரண ஒரு நாள் சம்பளம் 2000 ரூபாய் ஆக இருக்கும் இலங்கையில் ஒரு கிலோ கோழி இறைச்சியை வாங்க 1900 ரூபாய் வரை செலவாகும் இன்று இங்கிலாந்தில் 8 மணி நேரம் வேலை செய்யும் கூலி தொழிலாளியின் ஒருநாள் சம்பளம் இலங்கையில் 36 000 ஆயிரம் ரூபாய் வரையாகும். கோழி இறைச்சி ஒரு கிலோ 800 ரூபாய் அதாவது அவர் எட்டு மணி நேரம் வேலை செய்தால் 45 கிலோ கோழி இறைச்சியை வீட்டுக்கு வேண்டிச் செல்லலாம். வேறு ஒன்றும் எழுதுவதற்கு இல்லை எமது நாட்டு மக்களை நினைக்கும் போது அவர்கள் மிகவும் பாவம் 500 வருடங்கள் எங்களை வெவ்வேறு நாட்டினர் சுரண்டி வாழ்ந்தனர் கடந்த 75 வருடங்களாக அதிகாரத்தில் உள்ள எம்மவர்களே எம்மைச் சுரண்டி உண்கின்றனர். Credit:- மட்டக்களப்பு மண்வாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.