திங்கள், 18 டிசம்பர், 2023

யாழில். கார்த்திகை பூ செடியின் கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு!!

 


கார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார், அதனை அடுத்து அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

செங்காந்தள் மலர் என பண்டைய கால இலக்கியங்களில் கூறப்படும் கார்த்திகைப் பூச் செடியின் அனைத்துப் பகுதிகளும் விசத்தன்மை நிறைந்ததாகும். அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைப்பூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்து பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.