ஞாயிறு, 10 டிசம்பர், 2023

பருத்தித்துறையில் கைதான 25 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட 25 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையின் போதே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 25 தமிழக கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்த பின்னர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் கடற்படையினர் முற்படுத்திய போதே, கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.