புதன், 29 நவம்பர், 2023

யாழ் யுவதியைக் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி மரணதண்டனை விதிக்கப்பட்ட இரு ஆமிக்காரர்கள் விடுதலை!!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் யுவதியொருவர் கடத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு, கழிவுநீர் குழியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டது. அந்தக் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றைய கோப்ரல் மீது மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேனகா விஜேசுந்தர மற்றும் பி.சசி மகேந்திரன் உத்தரவிட்டனர். வழக்கின் முதலாம் பிரதிவாதியான கோப்ரல் காமினி சமன் லியனகேவுக்கு எதிராக மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதிவாதிகளான இராணுவ சிப்பாய் ஹேவபெடிகே சரத்சந்திர மற்றும் கோப்ரல் கமகே கித்சிறி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள கோண்டாவில் இராணுவச் சாவடியின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஜினி வேலாயுதம்பிள்ளை என்ற யுவதி மோட்டார் சைக்கிளுடன் கடத்தப்பட்டு, அருகிலுள்ள இராணுவத்தினர் ஓய்வெடுக்க பயன்படுத்தப்பட்ட வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, மலக்குழிக்குள் வீசப்பட்டதகவும் 2001ஆம் ஆண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஒரு ஜூரியின் முன் ஒரு வழக்கின் விசாரணைக்குப் பிறகு, ஜூரியின் உடன்பாட்டின் மூலம் தண்டனை தீர்மானிக்கப்பட்டிருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.