திங்கள், 27 நவம்பர், 2023

யாழில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரும் பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு...!

 


யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிசார் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தடை கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை(27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.

இதன்போது மாவீரர் தினத்திற்கு தடை கோரிய பொலிஸின் மனுவை யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நிராகரித்தார்.

"இறந்தவர்களை நினைவுகூருவதை தடை செய்ய முடியாது ஆனால் தடை செய்யப்பட்ட அமைப்பை மற்றும்/அல்லது அவர்களை அடையாளப்படுத்தும் கொடி உள்ளிட்ட எதையும் பயன்படுத்த முடியாது" என உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.