புதன், 29 நவம்பர், 2023

கோப்பாய் துயிலுமில்லத்தில் மகளீர் போராளிகள் போல் உடை அணிந்து வந்த சிறுவர்களின் உறவுகளிடம் கடும் விசாரணை!! கைதாகலாம்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் போராளிகள் அணிவதைப்போல ஆடை அணிந்து கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு வருகை தந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரிடம் இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிசாரினால் வாய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, குறித்த சம்பவம் கடந்த 27 ம் திகதி வடக்கு கிழக்கில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக இடம்பெற்றிருந்த நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் விமரிசையாக இடம் பெற்றிருந்தது குறித்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் அணியும் ஆடையினை ஒத்த ஆடைகளை அணிந்தவாறு ஒரு சில சிறுவர்கள் மாவீரர் தினநிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய திருநெல்வேலி கலாசாலை வீதிமற்றும் உரும்பிராய் மேற்கை வதிவிடமாக கொண்ட அறுவர் இன்று மாலை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரிடமும் வாய் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் இருப்பினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.