சனி, 25 நவம்பர், 2023

அபுதாபியில் வீழ்ந்து கோமாவிலிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயரத்தினம் ஒரு வருடத்தின் பின் யாழில் மரணம்!!

 கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக  கோமாவில் இருந்தவர் இன்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் 2014ஆம் ஆண்டு டுபாய் - அபுதாபிக்கு சென்று அங்கு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10.08.2022 அன்று மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் கோமா  நிலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இதுவரை காலமும் கோமா நிலையில் இருந்த நிலையில், கடந்த 17.11.2023 அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.