செவ்வாய், 21 நவம்பர், 2023

யாழில் இளைஞனை அடித்துக் கொண்ட கொடூர காவாலி பொலிஸ் இவனா?? இவன் தொடர்பான பயங்கர தகவல்கள் இதோ!!

 


இவனது பெயர் செல்வகுமார். இவன் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த நிலையில் அங்கு செய்த காவாலி வேலையினால் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளான்.

இவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்த போது செய்த அராஜகங்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தால் மரணதண்டனை கூட கிடைப்பதற்கு இவனுக்கு சந்தர்ப்பம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பெண்களுடன் சேட்டைகளில் ஈடுபடுபவன், குடித்துவிட்டு பொலிஸ் கடமையில் இருப்பான். இவ்வாறு கடமையில் இருக்கும்போதும் இல்லாத போதும் யாரையாவது கைது செய்தால் நரகத்தில் செய்யப்படும் சித்திரவதைகளை செய்வான்.

இலஞ்சம் வாங்குவதில் இவனை அடிப்பதற்கு யாரும் இல்லை. சாதாரண பொலிஸ் நற்சான்று பத்திரத்துக்கு யாராவது வந்தால் கூட அவர்களுக்கு மூளைச் சலவை செய்து பணம் வாங்கி விட்டு தான் பொலிஸ் நற்சான்று பத்திரம் வழங்கப்படும். அந்த நற்சான்று பத்திரம் இன்னொரு பொலிஸ் உத்தியோகத்தர் தான் வழங்குவார். ஆனால் தான் வழங்குவது போல இலஞ்சம் வாங்குவான்.

மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் யாராவது ஆவணங்களை மறந்து சென்றாலோ, ஆவணங்கள் இல்லாது சென்றாலோ, அல்லது தலைக்கவசம் அணியாது சென்றாலோ அவர்களை பிடித்து மிரட்டி, அடித்து இலஞ்சம் பெறுவான்.

பார்ப்பதற்கு ஒரு நகைச்சுவை மிக்க கட்டை தாரா போன்றுதான் இருப்பான் ஆனால் இவன் செய்த அட்டூழியங்கள் எண்ணில் அடங்காதவை. இவனுக்கு எதிராக பல முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் உள்ளன. அதுவே இவன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம். இவனுக்கு பயந்து பலர் இவனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்ய போவதில்லை.

பொலிஸ் நிலையத்திற்கு யாராவது சென்றால் அவர்களிடம் முறைப்பாடு பதிவு செய்வதில்லை. அவர்கள் மாறாக இவனால் மிரட்டப்பட்டு அனுப்பப்படுவார்கள். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கஞ்சா, கசிப்பு, போதைப்பொருள் விற்பனை செய்யும் அனைவரிடமிருந்தும் இவனுக்கு ஒரு தொகை பணம் வழங்கப்படும். ஆகையால் அவர்களை கைது செய்வதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.