சனி, 25 நவம்பர், 2023

வாகரை மாவீர் துயிலும் இல்ல நினைவு கல்வெட்டுக்கள் அடித்து உடைப்பு – கொடிகள் அறுத்து எறிவு


மட்டக்களப்பு வாகரையிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவு கல்வெட்டுக்களையும் கம்பி வேலி அமைக்கப்பட்ட கொங்கிறீட் தூண்களையும் இனந்தெரியாதோரினால் அடித்து உடைத்ததுடன், சோடிக்கப்பட்ட கொடிகளை அறுத்து எறிந்துள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது. நாளை மறுதினம் (27) மாவீரர் நினைவேந்தலையிட்டு வாகரையிலுள்ள கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தினை மாவீரர் ஏற்பாட்டுக் குழுவினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அங்கு காணியை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலி, கொங்கிறீட் தூண்களுக்கு மஞ்சள், சிவப்பு வர்ணம் தீட்டி கொடிகளை கட்டி அலங்கரித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி அமைக்கப்பட்ட கொங்கிறீட் தூண்கள் மற்றும் மாவீரர் நினைவு கல்வெட்டுக்களை இனம் தெரியாத குழு ஒன்று அடித்து உடைத்ததுடன், கொடிகளை அறுத்தெறிந்து சேதப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.