செவ்வாய், 21 நவம்பர், 2023

குஷ்பு யாழ்ப்பாணம் வரவில்லை!! குஷ்பு வெறியரான ஈ.பி.டி.பி ஸ்ரீரங்கேஸ்வரனின் மனக்குமுறல் இதோ!!

 


குஷ்பு ரசிகர்களில் பெருமளவானவர்கள்50 வயதைத் தாண்டிய அங்கிள்களாகவே இருப்பார்கள். அந்தவகையில் ஈ.பி.டி.பி கட்சி அங்கிள் தரும் தகவல்களை இங்கு தந்துள்ளோம்…

புலிகள் இயக்கத்தினரை திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளை பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்தினர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக இருந்த இசை நிகழ்வு ஒன்றினை தொகுத்து வழங்குவதற்காக தென்னிந்திய திரைப்பட நடிகை குஸ்பு அந்த நிகழ்வை நடத்தும் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் புலிகள் இயக்கத்தினரை பயங்கரவாதிகள் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டதாகவும் அதனை முன்னிலைப்படுத்தி தொகுப்பாளரான குஷ்புவை இலங்கைக்கு வர அனுமதிக்க மாட்டோம் என சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரவவிட்தாகவும் அதனால் அந்த நிறுவனம் நடிகை குஸ்புவை மாற்றியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


நாடாளுமன்ற உரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். மனித உரிமைகளை மதிக்காத காரணத்தால் அழிந்து போயினர் எனவும் புலிகளை அழித்த அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் புலிகளை அழித்தமையால் நான் இன்று திருமலைக்கு சென்று கோணேஸ்வரப் பெருமானை சுதந்திரமாக தரிசிக்க முடிவதாகவும் அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களுமே காரணம் என புகழாரமும் சூட்டியிருந்தார்.


இவ்வாறு புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பாசிசவாதிகள் என்றும் மனித குலத்தக்கே கொரூரமானவர்கள் எனவும் தன்னை கூட்டமைப்பின் தலைவராக புலிகள் நியமிக்கவில்லை எனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்த இரா சம்பந்தனை திருமலை மாவட்ட மக்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்திருக்கின்றனர்.

அவ்வாறாயின் புலிகள் பயங்கரவாதிகள் என்ற சம்பந்தனின் கருத்தை திருகோணமலை மாவட்ட மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று அர்த்தப்படுமா?

அதேபோல பிரபாகரன் வன்வலுவால் சாதிக்கமுடியாததை சட்டத்தரணி சுமந்திரன் மென்வலுவால் சாதிக்கின்றார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புழகாங்கிதம் அடைந்துவந்தனர்.

ஆகவே கருத்தச் சுதந்திரம் பேச்சுச் சதந்திரம் எழுத்துச் சுதந்திரம் ஒரு ஜனநாயகத்தில் வலுப்பெறவேண்டும் என்பதே எமது கருத்தாக உள்ளது.

திரைப்பட இயக்குனர் புகழேந்தி காற்றுக்கென்ன வேலி என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார்.

அப்படம் புலிகளுக்கு சார்பானது என தெரிந்ததால் பல நடிகைகள் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அப்படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக்கொண்டார். என தெரிவித்திருந்தமை குறிபபிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.