புதன், 1 நவம்பர், 2023

அவதானம் பெற்றோர்களே!! மாணவனின் சப்பாத்திற்குள் இருந்தது என்ன?? தந்தையின் பரபரப்பு வீடியோ!!

 


கவனம் பிள்ளைகள்….இன்று என் மகனின் பாதணியில்…..

பிள்ளைகளை சுயமாக தமது கடமைகளைப் பழக்கி எடுத்தாலும்
அதனைத் தாண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
அவர்களின் முக்கிய செயற்பாடுகளில் நாம் இறங்கித்தான் வேலை செய்ய வேண்டும்.
வீட்டிலிருந்து பாடசாலை செல்லும் வரை
கல்வியை விட நிறையவே படிக்கிறார்கள்…..
கூடுதலாக பெரியவர்கள்தான் அந்தப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
பாதைகள் அருகில் இருக்கும் குப்பைகள்
துப்புரவாக்கப்படாமல் பல இடங்கள்……
மது ரின்கள் போத்தல்கள் சிகரெட் பீடி துண்டுகள் உடைந்த பிசுங்கான்கள்…….
தொலைபேசி கதைத்துக்கொண்டு வாகனங்கள் செலுத்துதல் ……..
வீதி சமிக்ஞைகளை மதியாது வாகனங்கள் செலுத்துதல் …….
பாடசாலை வாசலில்
வாகனங்கள் பலதை விட்டு பிள்ளைகள் உட்செல்ல இடையூறு விளைவிப்போர்……..
பிள்ளைகள் நடந்து உட்செல்வதை அசௌகரியமாக்கும் வாசலில் வேகமாகச் செல்வோர் …….

நேரத்தை தவற விட்டு கையொப்பம் இடுவதற்காக பிள்ளைகள் செல்வதை பொருட்படுத்தாது வாகனங்களை வேகமாக உள்ளே கொண்டுசெல்லும் ஆசிரியர்கள் …….
காலதாமத்தை ஏற்படுத்தி பிள்ளைகளை அந்தரத்தில் இறக்கிவிட்டு ஓடும் சில உத்தியோகத்தர்கள் சில பெற்றோர்கள்……
சில ஆண் பிள்ளையும் சில பெண் பிள்ளையும் பாடசாலை பின்புறத்தில் நின்று கட்டிப்பிடித்துக்கொண்டு
முத்தமிட்டுக்கொண்டு (sorry)
நிற்பதை அறியாமல்
முன் மண்டபத்துக்குள் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளின் முக்கிய பொறுப்புவாய்ந்தவர்கள்……
பிள்ளைகள் வீதிக் கடவையில் கடக்கும்போது
பொருட்படுத்தாது பயணிப்போர்…….
பிள்ளைகள் முன்பு
கோபப்படுவோர்
கோபப்பட வைப்போர்…..
இப்படி நீளும் பிள்ளைகளின் அனுபவப் பாடங்கள்
என்னைப் பொறுத்தவரை பிள்ளைகள் பாதுகாப்புத் தொடர்பிலும்
என் வாகனம் செலுத்தும் முறையிலும்
பிள்ளைகளின் கடமைகள் சந்தோஸங்கள் தொடர்பிலும்
என்னாலான திட்டமிடலில் செல்கிறேன்.
எனது அலுவலக கடமை விடயம் தொடர்பிலும்
பாடசாலை செல்லாத சில பிள்ளைகளுக்காக
பிள்ளைகளையும் பெற்றோரையும் அழைத்து பெற்றோர்களையும் பிள்ளைகளையும் காலை முதல் மாலை வரை பாடசாலையில் இருக்க வைத்தும்
அவர்களுடன் அன்று முழுவதுமாகவும் நானும் பாடசாலையில் நின்றும்

அடிக்கடி அவற்றை மேற்பார்வை செய்தும் கொண்டும் இருக்கிறேன்
ஏனைய பிள்ளைகள் பாதுகாப்பு எடுக்கும் நான்
என் பிள்ளைகள் தொடர்பில் எப்படி அக்கறைப்படுவேன்.
(இவை அனுபவப் பகிர்வுக்கு மட்டும் பதிவிடுகிறேன்.)
நாம் காலில்போடும் பாதணியைக்கூட பாதுகாப்பான இடத்தில் வைத்தபோதும்
தேள் பூரான் பாம்பு போன்ற உயிரினங்கள் போகத்தான் செய்யும் பெற்றோர்களே. …..
பல வீடியோக்கல் பார்த்திருப்போம்
நம்மை இழந்தேனும் அவர்களை காக்கும் பொறுப்பு உள்ளது.
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல
இப் பதிவு
எமது சிறு சிறு செயற்பாடுகளால்க்கூட
அவர்களை வெற்றிபெறச் செய்யலாம்.
எதிர்காலத்தின் கண்களை
எதிர்காலத்தின் தூண்களை
உயர்வாக்கலாம்
R.சுமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.