புதன், 29 நவம்பர், 2023

நேற்று லண்டனில் ஒரு தமிழ் பெடியனை எதேச்சையாக சந்தித்தேன்!! அதன் பின் ….

 


லண்டனில் வசிக்கும் சிவஞானம் சிவச்சந்திரன் எனும் இலங்கை வைத்தியரின் பேஸ்புக்கிலிருந்து வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…..

நேற்று ஒரு தமிழ் பெடியனை எதேச்சையாக சந்தித்தேன். அட நம்ம ஏரியா பெடியன் என சந்தோசமாக கதைத்தேன்.
ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு ஏஜென்ட் மூலம் ஆட்களை பராமரிக்கும் வேலை என்று நிறைய செலவழிச்சு வந்திருக்கான்.
வந்த பின்புதான் தெரிந்திருக்கிறது அது ஒரு போலி கொம்பனி.
அவன் வந்த விசாவில் இலகுவாக மனிசி பிள்ளைகளையும் அழைத்து வந்திருக்கலாம்.
அதைக்கூட அந்த ஏஜென்சி அவனுக்கு சொல்லவில்லை. இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்று பதிய வாய்ப்பு இல்லை.திருட்டுத்தனமாக சின்ன அறையில் யாரோடாவது வாழவேண்டும். மாதா மாதம் சம்பளம் வந்தால்தான் இங்கே அறை கூட வாடகைக்கு எடுக்கலாம்.
வங்கி கணக்கு திறக்க முடியாது.
அவனுக்கு இருக்கும் நோய்க்கு மருந்து கூட எடுக்க போக பயப்பட்டு கொண்டு உள்ளான்.
வைத்தியரிடம் பதியும் போது எங்கே இருக்கிறாய் , என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டால் பிரச்சினை வந்துவிடும் என பயந்துகொண்டு இருக்கிறான்.
இனி இங்கே இன்னொரு வேலை எடுக்கவேண்டும். அந்த வேலை அவனுக்கு விசா ஸ்பொன்சர் பண்ணக்கூடிய வேலையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனால் சட்ட ரீதியாக இங்கே இருக்க முடியும்.
அவனது தகமையின் அடிப்படையில் அப்படி வேலை எடுப்பதும் சாத்தியமில்லை. யாராவது நல்ல பணக்காரர்கள் சொந்தக்காரராக இருந்து வியாபாரம் செய்து, அவனுக்கு நல்ல சம்பளம் மாதமாதம் கொடுக்க முன்வந்தால் முயற்சி செய்யலாம். ஆனால் அவனுக்கு அந்தளவு சம்பளம் கொடுப்பதை விட அரைவாசி சம்பளத்தில் இங்கேயே ஆட்களை வேலைக்கு எடுக்கலாம்.
சின்னக் குழந்தைகளை விட்டு வந்த அழுத்தம், வேலை இல்லாத அழுத்தம் என எல்லாம் சேர்ந்து அவனது நோயை அதிகரித்து உயிருக்கே ஆபத்து வரலாம்.
அவன் வரும்போது மருத்துவ சேவைக்கும் சேர்த்துதான் விசா பணம் செலுத்தி இருப்பான். அதனால் அவன் வைத்தியரிடம் போவதால் பிரச்சினை வராது , உடனே வைத்தியரிடம் சென்று மருந்து எடு என்று அறிவுரை கூறிவிட்டு மட்டும்தான் வர முடிந்தது.
அவன் வேலை கிடைக்காமல் வேறு வழிகளில் இங்கே இருந்துகொண்டு பிள்ளைகளை நேரில் பார்க்க வருடக்கணக்காகும். இங்கே அப்படி இருப்பதற்கான வாய்ப்புக்கள் எந்தளவு என்று கூட தெரியாது.
அவன் நிலமை இப்படித்தான் போகும் என்றால் அவன் ஏஜென்சிக்கு 50 லட்சம் கொடுத்து வந்திருக்கவே தேவையில்லை. அஞ்சு லட்சம் செலவழித்து சுற்றுலா விசாவில் வந்து இருக்கலாம்.
ஏஜென்சி காரன் பணம் உழைக்க இப்படி அப்பாவிகளை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.
எப்படியாவது வெளிநாடு போனால் சரி என்று நினைக்காதீர்கள். அங்கே போய் எப்படி தப்பிப் பிழைக்கப்போகிறீர்கள் என்று நினைத்து முடிவெடுங்கள்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் ஒரு பிள்ளை இருக்கும் குடும்பத்திற்கு ஆகக்குறைந்தது மாதம் 3000 பவுண்ட்ஸ் உழைத்தால் தான் ஒரு மத்திய தர வாழ்ககையாவது வாழ முடியும்.
இப்போதைய நிலையில் உத்தியோகபூர்வமாக வேலை செய்பவர்களுக்கே அதை உழைப்பது கடினம்.
நீங்கள் பார்க்கும் வெளிநாட்டு ரிட்டர்ன் பகடு எல்லாம் இங்கே வதிவுரிமை பெற்றவர்கள். இங்கே வதிவுரிமை பெற்றவர்கள் வேலைக்குப் போகாமலே கூட வாழலாம்.ஆனால் புதிதாக வருபவர்களுக்கு அப்படியான எந்த சலுகையும் இல்லை.
நீங்கள் மாடுமாதிரி உழைத்தால்தான் இங்கே மூன்று வேளை சாப்பாடு கூட கிடைக்கும். வெளிநாடு வரவேண்டாம் என்று சொல்லவில்லை. சும்மா இடைத்தரகர்களின் கதையை கேட்டு வந்து ஏமாறாதீர்கள்.
அப்படி வந்து , ஏமாந்து பிறகு அகதி உரிமை கோரி அழைந்து திரிந்து , குடும்பத்தை பிரிந்து , மூன்று வேளை சாப்பிடுவதற்காக நீங்கள் இங்கே செய்யும் வேலைகளை , அங்கேயே மற்றவர் என்ன நினைப்பார் என்று நினைக்காமல் செய்தால் இலங்கையிலேயே சந்தோசமாக வாழலாம்.
பேஸ்புக்கில் வரும் செய்திகளை நம்பி ஏஜென்சி காரனிடம் போய் ஏமாறாதீர்கள்.
இலங்கையில் பணம் இல்லாது விட்டாலும் ஏதோ வகையில் வாழலாம். இங்கே பணம் இல்லாது விட்டால் பைத்தியம் பிடிக்கும். இங்கே அரசாங்கம் உங்களை ஏற்றுக்கொள்ளும் வரை நீங்கள் உங்கள் அடையாளத்தையே தொலைத்த ஒரு நாடோடி போல்தான் இருக்க வேண்டும்.
அங்கே நல்ல வேலையில் சொகுசாக இருந்தவரகள்கூட ஏஜென்சி காரனிடம் கதையைக் கேட்டு இங்கே வந்து இப்படி நாடோடி போல திரிகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.