புதன், 1 நவம்பர், 2023

இலங்கையின் பிரபல தொழிலளதிபர் தினேஷ் ஷாப்டர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்?? நீதிமன்றம் தெரிவித்த கருத்து இதோ!!

 


தொழிலளதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகள் என்பனவற்றை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான்  ரஜீந்திரா ஜயசூரிய இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

இச்சம்பவத்தின் மூலம் குற்றச் செயல்கள் வெளிவரும் எனவும், அதற்கமைவாக சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு வழங்கிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் இன்று (01) அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (31) அறிவித்திருந்தது.

ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, தனது அறிக்கையை நேற்று நீதிமன்றத்தில் கையளித்திருந்தது.

முத்திரையிடப்பட்ட அறிக்கையை பெற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய, ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் இன்று அறிவிக்கப்படும் என அறிவிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.