புதன், 29 நவம்பர், 2023

யாழில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிலோ கஞ்சா மீட்பு

 


யாழில் நிலத்தில் புதைத்து வைத்திருந்த சுமார் 34 கிலோ கேரளா கஞ்சாவை, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்ட பொலிஸார் , அதனை புதைத்து வைத்தார் எனும் சந்தேகத்தில் 24 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் கடற்கரையை அண்டிய பகுதியில் கஞ்சா புதைத்து வைத்திருப்பதாக மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை செய்தனர். 

அதன் போது 3 பரல்களில் 17 பொதிகளாக கஞ்சா நிலத்தில் புதைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர். 

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.