புதன், 1 நவம்பர், 2023

யாழ் வடமராட்சியில் 2 வருடங்களாக காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன் காசி பிடிபட்டது எப்படி?

 


2 வருடங்களுக்கும் மேலாக பொலிசாருக்கு டிமிக்கி விட்டு, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபடி, பல்வேறு வாள்வெட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ‘துன்னாலை காசி’யை நெல்லியடி பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

முள்ளி காட்டுக்குள் பதுங்கியிருந்த காசியை நெல்லியடி பொலிசார் இன்று (31) காலையில் மடக்கிப் பிடித்தனர்.

வடமராட்சி பிரதேசங்களில் இடம்பெற்ற பல வாள்வெட்டு, வீடு புகுந்து திருட்டு, தாக்குதல், கொடிகாமம்- பருத்தித்துறை வீதியின் முள்ளி பகுதியில் இடம்பெறும் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் ‘துன்னாலை காசி’.

காசியை கைது செய்ய பொலிசார் பலமுறை முயன்றும் முடியவில்லை. ஒருமுறை பொலிசாரின் பிடியில் சிக்கிய போதும், பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி விட்டு, காசி தப்பியோடியிருந்தார்.

இந்த நிலையில், முள்ளி காட்டுப்பகுதிக்குள் காசி தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும தகவல் நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்ததன் அடிப்படையில், இன்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, காசியை மடக்கிப் பிடித்தனர்.

காசியிடம் நெல்லியடி பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரால் திருடப்பட்ட பல்வேறு பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை 5 நீரிறைக்கும் மோட்டார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.