வியாழன், 2 நவம்பர், 2023

அப்பா அடித்துவிட்டார் என்ற கோபம்!! 15 வயது ரதிப்பிரியா துாக்கில் தொங்கினாள்!!

 


தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாய் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தந்தையின் தாக்குதலால்  மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.