செவ்வாய், 31 அக்டோபர், 2023

யாழ் நகரப் பகுதியில் பிக்மீ ஓட்டோ மற்றும் சாரதி மீது ஏனைய ஓட்டோச் சாரதிகள் கடும் தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் பிக்மீ செயலி ஊடாக செயற்படும் முச்சக்கர வண்டியை சேதப்படுத்தி, சாரதியையும் தாக்கியுள்ளதாக, வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31) காலையில் இந்த சம்பவம் நடந்தது.போதனா வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக உள்ள சிறிய பாதையொன்றில் முச்சக்கர வண்டி தரித்து நின்றபோது, அங்கு வந்த வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர், அங்கு தரித்து நிற்பதற்கான காரணத்தை வினவியுள்ளனர்.பிக்மீ செயலி ஊடாக சேவையில் ஈடுபடுவதாகவும், வாடிக்கையாளருக்காக காத்திருப்பதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். அங்கு முச்சக்கர வண்டியை நிறுத்த முடியாது என கூறிய வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள், பிக்மீ முச்சக்கர வண்டியையும் தாக்கி சேதப்படுத்தியதுடன், சாரதியையும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.