திங்கள், 16 அக்டோபர், 2023

இலங்கை - இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்!

 


இந்தியாவின் நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை (14.10.2023) காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார்.போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை (15.10.2023) இரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.எனினும் திங்கட்கிழமை (16.10.2023) மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.