திங்கள், 30 அக்டோபர், 2023

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள்; அரசாங்கத்துக்கு இறுதி எச்சரிக்கை!!

 


போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளும் இன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உடனடியாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் எதிர்காலத்தில் பாரிய போராட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், பலமுறை அரசாங்கத்துடன், கலந்துரையாடல்கள் நடத்தியும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை. இம்முறை வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாகவேனும் தமக்கான போக்குவரத்து கொடுப்பனவு உட்பட ஏனைய கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினமும் இந்த போராட்டம் தொடரும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.