செவ்வாய், 17 அக்டோபர், 2023

மன்னாரில் ஊணமுற்றவர்களை காட்டி புலம்பெயர் சமூகத்திடம் பெரும் மோசடிகளைச் செய்யும் கொள்ளையர் கூட்டம்!!


மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக பணம் சேகரிப்பதாக கூறி வெளிநாட்டில் பண சேகரிப்பை பிரித்தானியாவில் இயங்கும் மன்னாரை சேர்ந்த அமைப்பு ஒன்று மேற்கொள்ள உள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே மன்னார் வைத்தியசாலைகளுக்கு என வெளிநாடுகளில் கலைநிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், நடைபவணி என்ற பெயரில் பல லட்சம் பணம் சேகரிக்கப்பட்ட போதிலும் அவற்றில் சிறிய அளவிலான பணமே வைத்திய சாலைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் மிகுதி பணம் தொடர்பில் உரிய பதில் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மன்னாரில் அநேகமான மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்ற நிலையில் சில மாற்றுத்திறனாளிளை பயன்படுத்தி வருமானம் சேர்க்கும், சொத்துக்களை சேர்க்கும் கும்பலுடன் இணைந்து வெளிநாடுகளில் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் என்ற பேரில் பாரிய பண சேகரிப்பில் குறித்த அமைப்பு ஈட்படவுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மன்னாரை சேர்ந்த புலம்பெயர் மக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.