செவ்வாய், 17 அக்டோபர், 2023

யாழில் கணவன் அஜந்தனின் தம்பியுன் கள்ளக் காதல்!! ஆசுப்பத்திரியில் கட்டுக்கடங்காமல் ஆடைகளை களைந்த ஜமுனா!! ஜமுனா மரணத்தின் பின்னணி இதோ!!


யாழ்ப்பாணம், நாவற்குழியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கணவரினால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அவர்களுக்குள் நிதி தொடர்பான முரண்பாடுகள் நீடித்த நிலையில், தகாத உறவு சந்தேகமும் சேர, இந்த கொலை நடந்துள்ளது.

நாவற்குழி, ஐயனார் கோயிலடியை சேர்ந்த அஜந்தன் ஜமுனா (23) என்ற இளம் தாயே உயிரிழந்தார். அவருக்கு 2 பிள்ளைகள்.

கொலைச்சந்தேகநபரான கணவன் அஜந்தன் (25) யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று காலையில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரான அஜந்தன் குற்றப்பின்னணியுடையவர். திருட்டு, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுடன், தாக்குதல் வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தார். நாவற்குழியில் பயணிகள் பேருந்தொன்றை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவத்தி தொடர்புபட்ட குற்றத்துக்காக 6 மாத சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் அண்மையில்தான் விடுதலையாகியிருந்தார்.

அஜந்தன், மனைவி, இரண்டு பிள்ளைகள் தங்கியருந்த வீட்டுக்கு அண்மையில் அஜந்தனின் தாயார் வீடு இருந்தது. அங்கு அவரது இளைய சகோதரனும் தங்கியிருந்தார்.

சிறைச்சாலையில் இருந்த காலத்தில் தனது இளைய சகோதரனுக்கும், மனைவிக்குமிடையில் தகாத உறவு ஏற்பட்டதாக அஜந்தன் சந்தேகித்திருந்தார். அது பற்றி தனது பிள்ளைகளிடமும் அடிக்கடி கேட்டபடியிருந்துள்ளார்.

தான் இல்லாத நேரங்களில் தனது தம்பி வீட்டுக்கு வருவதும், படுக்கையில் இருப்பதும், மனைவி உணவு பரிமாறும் தகவல்க அறிந்து ஆத்திரமடைந்த அஜந்தன், அது தொடர்பில் மனைவியை எச்சரித்துள்ளார்.

இந்த தொடர்பை நிறுத்தும்படியும், தாம் சச்சரவின்றி வாழலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது தாய்,சகோதரனுக்கு உணவு கொடுக்க வேண்டாமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த ஜமுனாவின் தந்தையார் காலமாகிய பின்னர், சுமார் 18 லட்சம் ரூபா பணம், ஜமுனாவின் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது.

அந்த பணத்தை தருமாறும், ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வேன் என்றும் அஜந்தன் கேட்படியிருந்துள்ளார், என்றாலும், கணவனின் போதைப் பழக்கம் உள்ளிட்ட தவறான பழக்கங்களினால் பணத்தை நாசமாக்கி விடுவார் என குறிப்பிட்டு, அதை கொடுக்கவில்லை.

என்றாலும், அண்மையில் கணவர் சிறையிலிருந்து விடுதலையான போது அவருக்கு தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

நேற்றும் தனது தம்பி வீட்டுக்கு வந்ததாகவும், மனைவி சாப்பாடு கொடுத்ததாகவும் அறிந்த அஜந்தன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோமடைந்த மனைவி, தனது தாயார் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இரவு 7 மணியளவில் தனது தம்பியின் வீட்டுக்கு சென்று, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட தம்பி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், தனது மனைவியின் தாயார் வீட்டுக்கு சென்று, மனைவியுடன் சமரசமாகி அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். 

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது தகராறு முற்றியுள்ளது. இதன்போது வீட்டுக்கு பின்னால் சென்று தென்னம்மட்டையொன்றை வெட்டி வந்துள்ளார். பனம் மட்டையும் எடுத்து வைத்திருந்துள்ளார்.

அவற்றினால் மனைவியை கடுமையாக தாக்கத் தொடங்கியுள்ளார். மனைவியை சுவருடன் தள்ளிவிட்டதில், தலை சுவரில் மோதி, கடுமையான இரத்தப் பெருக்கு ஏற்பட்டது. மனைவி இரத்த வெள்ளத்தில் கிடந்த போதும், அஜந்தன் தாக்குதலை நிறுத்தவில்லை.

இரவு 9.30 மணியளவில் தாக்குதல் நடந்துள்ளது.

ஜமுனாவின் அவலக்குரல் கேட்டு, அஜந்தனின் தாயார் மற்றும் அயலவர்கள் வந்து, சிரமப்பட்டு, தாக்குதலை நிறுத்தியுள்ளனர். பின்னர் அஜந்தாவின் தலைக்காயத்தின் இரத்த பெருக்கை கட்டுப்படுத்த கோப்பி துாளை வைத்து கட்டுப் போட்டுள்ளனர்.

பின்னர், முச்சக்கர வண்டியொன்றில் மனைவியை ஏற்றியபடி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அஜந்தனே அழைத்து வந்துள்ளார். அவரது உடை இரத்தத்தில் நனைந்திருந்தது. முகத்திலும் இரத்த துளிகள் தெறித்திருந்தன.

யாழ்ப்பாணம போதனா வைத்தியசாலையில் ஜமுனா அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் சந்தேகத்துக்குரியவை என வைத்தியர்கள் குறிப்பிட்டதையடுத்து, அஜந்தன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜமுனா கடுக்கடங்காத நடத்தையை வெளிப்படுத்தியுள்ளார். தனது ஆடைகளை கிழித்து எறிந்துள்ளார். தாதியர்களை தாக்கினார். அவரது தலைக் காயத்தின் தன்மையை பரிசோதிப்பதற்காக சி.ரி ஸ்கான் செய்ய முயன்றபோது திமிறினார். அவரை தாதியார்கள் அமுக்கிப் பிடித்து ஸ்கான் செய்ய முயன்றனர். இரண்டு தாதியர்களை தள்ளி விழுத்திவிட்டு, அங்கிருந்து ஓடிச் சென்ற ஜமுனா? யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவரச சிகிச்சை பிரிவில் விழுநு்து உயிரிழந்துள்ளார்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற அஜந்தன், வீட்டுக்கு சென்று, குளித்து உடை மாற்றிக் கொண்டு, அங்கிருந்து வெளிளியேறினார். அவருக்கு மனைவி உயிரிழந்த தகவல் தெரியாது.

நேற்றுக் காலை பஸ்தியான்சந்திக்கு அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீல நிற முச்சக்கர வண்டியொன்றில் அவர் உட்கார்ந்திருந்த போது, சிவில் உடையில் சென்ற இரண்டு பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

பொலிசார் கைது செய்த போது, அஜந்தன் அழுதபடி யாருடனோ கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.மனைவியை அடித்து காயப்படுத்தி விட்டேன், தற்கொலை செய்து கொள்ளப் போகின்றேன் என நண்பர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மனைவியின் பிரேத பரிசோதனை இன்று காலையில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.