திங்கள், 16 அக்டோபர், 2023

இலங்கை கடற்படையினரால் கைதான 27 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் !!

 


ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 14 ஆம் திகதி சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப் படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்தது.

அதை போல தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது இரண்டு விசைப் படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது.

இந்த நிலையில் ஐந்து விசை படகையும், 27 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், அதேபோன்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த 9 படகுகளை மத்திய அரசு மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 18 ஆம் தேதி பாம்பன் சாலை பாலத்தின் நடுவில் மீனவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.