திங்கள், 30 அக்டோபர், 2023

வடபகுதி பெற்றோரே அவதானம்!! அக்கா, தங்கைகளான 16 வயதான மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களுடன் ஆமிக்காரன் கைது!!

 


பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 16 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட இராணுவ சிப்பாய், அந்த மாணவியின் இளைய சகோதரியுடனும் தொடர்பு கொண்டு, இவ்விருவரின் நிர்வாணப் புகைப்படங்களை ​ தனது வாட்ஸ்அப் மூலம் தனது அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளார்.அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். அதனை தவிர்ப்பதற்காக மூத்த சகோதரியிடமிருந்து 50,000 ரூபாவை வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டார்.

அவ்வாறு அச்சுறுத்திய இராணுவ சிப்பாய், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வடக்கில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதானவர் என்றும் அவர் குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.16 வயது பள்ளி மாணவி, இராணுவ வீரரின் முகநூல் பக்கத்தின் மூலம் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார், ஆனால் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்று விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.