திங்கள், 16 அக்டோபர், 2023

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

 


தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (16) மாலை உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கடந்த சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் - தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை (14) 2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று (15) காலை மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கடற்படையின் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மீனவர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 15 மீனவர்களும் இன்று (16) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.