வெள்ளி, 22 செப்டம்பர், 2023

யாழ் பலாலி வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கோபிநாத்க்கு ஏற்பட்ட பயங்கர சம்பவம் இது!!

 


பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நான் பெற்றுக்கொண்ட மனம் வருந்தத்தக்க அனுபவம்.
கடந்த 12.09.2023 காலை 8.25 மணியளவில் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்ற நான் ஒரு முதலுதவி பயிற்றுவிப்பாளர் என்றவகையில் சுய விருப்பின் பெயரில் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அறிய உதவும் Serum Creatinine எனப்படும் பரிசோதனையை செய்வதற்காக குருதி மாதிரியினை வழங்கியிருந்தேன். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பரிசோதனையின் முடிவினை பெறச்சென்றிருந்தபோது அங்கு சில நிமிடநேரத்தின் பின் ஒரு பெண் கையில் எனது பரிசோதனை முடிவினை வழங்கிவிட்டு அது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார். அத்தருணம் எனது பரிசோதனை முடிவினை பார்வையிட்ட எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
ஆம் அந்த முடிவில் சாதாரணமாக வளர்ந்த சுகதேகியான ஆண் ஒருவருக்கு 0.8 தொடக்கம் 1.3 mg/dl இருக்கவேண்டிய Creatinine இன் அளவு எனது பரிசோதனை முடிவில் 4.4 mg/dl ஆக காணப்பட்டது. இந்த அளவானது இரண்டு சிறுநீரகங்களும் தீவிரமான பாதிபைக்கொண்டுள்ளது என்பதனை தெரிவித்தது. 31வயதுடைய ஆண்மகன் ஒருவருக்கு இவ்வாறான பாதிப்பு என அறிவிக்கப்பட்டால் அந்த ஆண்மகனின் மனநிலை அல்லது உளநிலை என்னவாக இருந்திருக்க முடியும் என்பதை அனைவரும் உணர்வீர்கள்.
அந்த மனமுடைந்த மனோநிலையில் பணிப்பாளரை மாலை 6.15 மணியளவில் சந்தித்தபோது அவர் கூறியது இவ் பரிசோதனை முடிவு தொடர்பாக நான் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனர் ஒருவரை சந்திக்க பரிந்துரைக்கப்பட்டதுடன் மீண்டும் RFT (Renal Function Test) எனப்படும் முழுமையான சிறுநீரக பரிசோதனைக்கும் பணிக்கப்பட்டு அதற்கான குருதி மாதிரியை வழங்கச் சென்றிருந்தபோது PRO அவர்களினால் தனியாக மாதிரி தேவையில்லை எனவும் காலையில் serum creatinine பரிசோதனைக்கு வழங்கிய குருதி மாதிரியில் RFT பரிசோதனையினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு மறுநாள் மாலை 6.00 மணிக்கு சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனர் ஒருவருக்கும் என்னால் முற்பதிவு செய்யப்பட்டது.
மறுநாள் 13.09.2023 அன்று காலை 8.30 மணிக்கு RFT பரிசோதனை முடிவினை பெற்று பார்த்தபோது அதிலும் serum creatinine அளவு எவ்வித மாற்றமும் இன்றி 4.4 mg/dl ஆகவே இருந்தது.
மனமுடைந்த நிலையில் மாலை சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனரின் ஆறுதல் தரும் வார்த்தை எதையாவது கேட்கமுடியாதா என்ற ஏக்கத்துடன் காத்திருந்து மாலை 7.00 மணியளவில் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனரை சந்தித்தபோது என்னை முழுமையாக அன்பாக சிறுநீரக பாதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் குணங்குறிகளை பார்த்தும் கேட்டும் ஓர் முடிவிற்கு வந்த வைத்திய நிபுனர் அவர்கள் இந்த Serum Creatinine மற்றும் RFT பரிசோதனை முடிவில் தனக்கு திருப்தி இல்லை எனவும் தான் பரிந்துரைக்கும் வேறு ஒரு தனியார் ஆய்வுகூடத்தில் 8 விதமான பரிசோதனைக்கு பரிந்துரைத்துவிட்டு அவர் கூறிய வார்த்தை “இங்கு (அவ் வைத்தியசாலையில்) நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசோதனை முடிவானது பிழையான முடிவாகவே இருந்துவிடவேண்டும்” என்றாகும். அவரது வார்த்தையில் இருந்து இது எந்தளவு பாரதூரமான நிலை என்பதை என் போன்றே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
அதன்பின் மறுநாள் காலை 14.09.2023 காலை 8.30 மணியளவில் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனர் பரிந்துரைத்தமைக்கமைய அந்த தனியார் ஆய்வுகூடத்தில் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளை வழங்கிவிட்டு சிறந்த சாதகமான முடிவிற்காக காத்திருந்து அன்றைய தினம் மாலை முடிவுகளை பெற்று பார்தவுடன் மீண்டும் உயிர்பெற்றது போன்ற ஒரு உணர்வினை அனுபவித்தேன்.
ஆம் அந்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சரியான சாதாரண அளவுகளையே காண்பித்தன. அதன் பின் நேற்றய தினம் (19.09.2023) மீண்டும் அதே தனியார் வைத்தியசாலைக்குச் சென்று மீண்டும் இன்றைய தினம் (20.09.2023) சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனருக்கு முற்பதிவினை மேற்கொண்டு பரிசோதனை முடிவினை காண்பித்தபோது அனைத்தும் சரியாக உள்ளது என்றும் தவறான Serum Creatinine பரிசோதனை முடிவினால் ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அவ் வைத்தியசாலையின் PRO மற்றும் அவர் முன்னிலையில் வைத்தியசாலை ஆய்வக உத்தியோகத்தரும் (MLT) சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் இவ்வாறான தவறு அங்கு இடம்பெறுவது இது 2ஆம் தடவை எனவும் முதல் தடவை ஏற்பட்ட தவறின்போது வைத்திய நிபுனர் அவர்களால் வைத்தியசாலை ஆய்வக உத்தியோகத்தருக்கு பரிசோதனை செய்யும் இயந்திரம் சரியான பிரமாணத்திற்கமைய( Calibration) ஒழுங்கு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டும் அது இன்றுவரை சரிப்படுத்தப்படவில்லை என எச்சரிக்கப்பட்டனர்.
ஓர் முதலுதவி போதனாசிரியர் என்றவகையில் எனக்கிருக்கும் மருத்துவ அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்டையில் வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவு தவறானது என என்னால் ஊகித்துக்கொள்ள முடிந்தபோதும் 12.09.2023-14.09.2023 வரை( சரியான பரிசோதனை முடிவு வரும்வரை) மனதளவில் தளர்ந்த நிலையினையே உணரமுடிந்தது.
மருத்துவ அறிவுள்ள எனக்கே இவ்வாறான ஒரு நிலை என்றால் சாதாரணமாக மருத்துவ அறிவில்லாத ஒருவருக்கு இவ் நிலை ஏற்பட்டிருந்தால் அவரது மனோவியல் நிலை என்ன? இவ்வாறான ஒருவர் மீண்டும் வைத்திய நிபுனரிடம் பரிசோதனை முடிவினை காண்பிக்கும்வரை அவர் எவ்வாறான ஒரு மனவுளைச்சலுக்குள்ளாகி இருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்…
குறிப்பு : அவ் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண்பிள்ளைகளின் வாழ்வாதார நிலையின் நல்லெண்ணம் கருதி வைத்தியசாலையின் பெயர் வெளியிடப்படவில்லை…
* யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன்..*
-கோபிநாத் சண்முகேஸ்வரன்-
முதலுதவி போதனாசிரியர்,
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்.

May be an image of ticket stub, blueprint and text that says "Patient Name :MR.S.KOBINATH SERUM Specimen Referred By :31/ YEARS/M Age/Sex Specimen No: VSH/B/67611 Tested on Performed by: Fully automated chemistry analyzer Mindray BS- 240 2023-09-12 Result Creatinine Unit Reference Range 4.4 mg/dl (0.5-0.9-female),(0.8-1.3 male) sugeot- RPT"

May be an image of blueprint and text

May be a graphic of text that says "SERUM RENAL PROFILE Result Value Unit Laboratory Investigation UREA SERUM CREATININE- SERUM ESTIMATED GFR PHOSPHOROUS INORGANIC SERUM URIC ACID SERUM CALCIUM- SERUM SODIUM SERUM POTASSIUM- SERUM CHLORIDE- SERUM Referance Interval Result Interpretation 15 0.90 Over 3.2 5.7 8.8 139 4.2 105 NORMAL NORMAL mg/dL mg/dL ml/min/1.73/m² mg/dL mg/dL mg/dL mmol/L mmol/L mmol/L Comment 15-45 15 0.9-1.3 >90 2.5-4.5 3.6-7.7 8.5-10.5 135-148 3.5- 3.5-5.3 95-111 NORMAL NORMAL NORMAL NORMAL NORMAL NORMAL"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.