சனி, 23 செப்டம்பர், 2023

7 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அஜித்குமாருக்கு 12 வருட கடூழிய சிறை!!

 

7 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளான தந்தைக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனையும், பதிக்கப்பட்ட மகளுக்கு 500,000 ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட செப்டம்பர் 21 அன்று உத்தரவிட்டார்.

ஆனமடுவ காவற்துறையில் கடமையாற்றிய நவகத்தேகம, கல்வாங்குவ, முல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 72640 என்ற இலக்கமுடைய கான்ஸ்டபிள் அஜித் குமார என்பவருக்கே இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிறுமி பெப்ரவரி 19, 2019 அன்று அல்லது அதைச் அண்மித்த மூன்று சந்தர்ப்பங்களில் அவரது தந்தையான கான்ஸ்டபிளால் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெப்ரவரி 25, 2020 அன்று, சிறுமியின் பாதுகாவலராக இருந்த கந்தளாய், வான்-எல, பன்சல்கொடெல்ல என்ற முகவரியில் வசிக்கும் சிறுமியின் பாட்டி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேகநபர் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு, ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.அதன்படி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்து, செப்டம்பர் 21 ஆம் திகதி, வழக்கின் தீர்ப்பை அறிவித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என உத்தரவிட்டார்.மூன்று குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வீதம் விதிக்கப்பட்ட தண்டனையை, ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.மேலும், ஒவ்வொரு குற்றத்திற்கும் ரூ.10,000 அபராதம் வீதம் ரூ.30,000 அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.500,000 நட்டஈடும் செலுத்த உத்தரவிட்டார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈட்டை செலுத்த தவறின் மேலும் ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.