செவ்வாய், 12 மார்ச், 2019

மட்டக்களப்புக்கு வந்த விவேக்!! இலங்கைத் தமிழன் இருக்கும்வரை தமிழை அழிக்க முடியாது!!


உலகில் கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரையிலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது விவேகானந்தரின் நூல் தொகுதியொன்றும் நடிகருக்கு சுவாமிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

‘வாங்கோ… காட்டுறன்’: பெண் உறுப்பினரை அழைத்த யாழ் முதல்வர் ஆர்னோல்ட்!

யாழ் மாநகரசபையின் இன்றைய அமர்வில் இடம்பெற்ற சம்பவமொன்று, சபையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது. அதேவேளை, யாழ் மாநகரசபை முதல்வரின் மனதில் படிந்துள்ள ஆணாதிக்கதனத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களிற்கு தமிழில் பெயர் சூட்டுவது தொடர்பான விவாதம் இன்று காலையில் மாநகரசபையில் இடம்பெற்றது. இதன்போது, யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், ஈ.பி.டி.பி உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜா எழுந்து- “ஆர்னோல்ட் என்ற பெயரின் தமிழ் அர்த்தம் என்ன?“ என கேட்டார். இந்த கேள்வியால் நிலைகுலைந்த ஆர்னோல்ட், பெரும்பாலான சூழல்களில் எல்லா ஆண்களும் ஒளிந்துகொள்ளும், ஆழ்மனதில் படிந்துள்ள உத்தியிடம்- இரட்டை அர்த்தத்தில், ஆபாசமாக பேசி, பெண்களை பணிய வைக்கும்- சரணடைந்தார். சட்டென, “வாங்கோ காட்டுகிறேன்“ என்றார். அவரது இரட்டை அர்த்த பேச்சால், சபையிலிருந்த மற்றைய உறுப்பினர்கள் (பெரும்பாலானவர்கள் ஆண்கள்) கைகொட்டி சிரித்தனர். பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆர்னோல்ட், “என்னுடைய பெயருக்கு தமிழ் அர்த்தம் இருக்கிறது. வாருங்கள், அதை காட்டுகிறேன் என்றுதான் சொன்னேன்“ என்றார். சிறிதுநேர சிரிப்பொலியின் பின்னர் இந்த விடயம் அடங்கியது.

கிளிநொச்சியில் இரணைமடு குளத்தினுாடாக இம்முறை அதிகளவில் சிறுபோகம்!!


கிளிநொச்சியில் இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது 14,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதைப்பு திகதி, நீர் விநியோக திகதி, கால்நடை கடடுப்பாட்டு திகதி என்பன அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கூட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே வேளை கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர்  இம்முறையே அதிக அளவான சிறுபோக நெற்செய்கை பல ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.

மட்டக்களப்பில் தண்ணீரில் அமுக்கிக் கொல்லப்பட்ட விவசாயி!! (Photos)

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள றாணமடு மலையார்கட்டு வயல் பிரதேசத்தில் வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் வயலின் நீர் ஓடும் வாய்காலிவல் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக நேற்று திங்கட்கிழமை (11) இரவு மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனா.

வெல்லாவெளி றாணமடு பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய விவசாயியான கணவதிப்பிள்ளை திருநாவுக்கரசு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவதிப்பிள்ளை திருநாவுக்கரம் அவரது மருமகன் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு தமது வயலுக்கு இரு மோட்டார் சைக்கிளில் சென்று அதனை வயல் பாதையில் நிறுத்திவிட்டு தமது வயல் சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு வந்தபோது அவர்களின் இரு மோட்டார் சைக்கிளை மூவர் கொண்ட குழு தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடிய போது அதில் ஒருவரை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில் மாமனாரின் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் செல்லும் அளவிற்கு இருந்ததையடுத்து அவரை மருமகள் அவரின் வீடு செல்லும்படி தெரிவித்துவிட்டு ஒடமுடியாத நிலையில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை வீதிக்கு கொண்டுவந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்று மோட்டார் சைக்கிளை அங்கு இறக்கி வைத்துவிட்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது மற்றும் மாமானாரின் மோட்டார் சைக்கிளை 3 பேர் கொண்ட குழு அடித்து சேதப்படுத்திதாக முறைப்பாடு தெரிவித்தார்.

இதனையடுத்து மருமகள் மாமனாரின் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீடுதிரும்ப வில்லை என அறிந்த நிலையில் மாமனாரை காணவில்லை என உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தாh.

இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலையில் கிராம மக்கள் பொலிசாருடன் ஒன்றினைந்து காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் வயல் பகுதியில் காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் இருப்பதை கண்டுபித்தனர்.

பொலிசார் மேப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் காணாமல் போனவரை கண்டுபிடிக்க முடியவில்லை இந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வயலில் நீர் ஓடும் வாய்காலில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள போக்கினுள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சந்தேகத்தில் இன்னொருவர் உட்பட இருவரை கைது செய்ததுடன் குறித்த விவசாயிக்கும் இவர்களுக்குமிடைய இடம்பெற்று வந்த வயல் காணிப் பிரச்சனை காரணமாக விவசாயின் கைகளை கட்டி அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணயில் தெரியவந்துள்ளது .

இதேவேளை மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேர்கொண்டுவருகின்றனர்.
Image may contain: outdoorImage may contain: one or more people, grass, outdoor and nature

மட்டக்களப்பில் யுவதிகளுடன் காமலீலை!! முஸ்லீம் காமுகன் நையப்புடைப்பு (Photos)

சற்று முன்னர் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறில் தமிழ்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய முஸ்லிம் காமக்கொடூரன் மீது தாக்குதல்!!!

அம்பாரை ஹாடி தொழினுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் நுவரேலியா தலாவக்கலை சேர்ந்த எமது தமிழ்மாணவிகளை மட்டக்களப்பு களுதாவளையில் தங்கிருந்த வீட்டில் நயவஞ்சகமாக தமது பாலியல் இச்சையை முடித்து கைகழுவி விடுவதற்கு வந்த கல்முனைக்குடி முஸ்லிம் நரியை பிடித்து எமது தமிழ் இளைஞர்கள் சராமரி கவனிப்பில் இனி வாழ்க்கையில் எந்த ஒரு தமிழிச்சியுடன் லவ் ஜிகாத் பெயரில் ஏமாற்ற நினைத்தால் மரணபயத்தை காட்டியுள்ளார்கள்,
தற்போது அதிபட்ச கவனிப்பில் முஸ்லிம் லவ்ஜிகாத் உறுப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அன்பார்ந்த தமிழ் பெற்றோர்களே உங்கள் பெண்பிள்ளைகளை தூரத்து ஊரில் படிக்க அனுப்பினால் அவர்களை பற்றி விசாரித்து கவனமாக பராமரியுங்கள்,இப்பொழுது அந்திய முஸ்லிம் இனத்தவர் தமது கழுகுக்கண்களை துருவி துருவி தமது மனைவி,சகோதரிகளுக்கு ஹபாயாவினால் மூடி வைத்துக்கொண்டு மாற்று இனமான எமது தமிழ்பெண்களின் தசைகளை குதற சபலப்புத்தியுடன் அழைகின்றார்கள்.இவர்கள் கௌரவமான தோற்றத்தில் ஒரு பல்கலைக்கழக ,தொழினுட்ப கல்லூரி ,வியாபரிகள்,அரச அலுவலகர் வேடத்தில் நடமாடுகின்றார்கள்.அவதானமாக பேணுங்கள்.

பெற்றோர் போன்று எமது தமிழின சகமாணவர்களும் நீங்கள் பல்கலைக்கழகத்திலையோ ,தொழினுட்ப கல்லூரியிலயோ,பாடசாலை மாணவரோ,ஒரே அரச திணைக்களத்தில் கடமைபுரிபவராகயிருந்தால் அங்கிருக்கும் உங்கள் ஒரே மாணவிகள் தவறானவர் சகவாசத்தோடு தொடர்பில் உள்ளார்கள் எனில் உடனடியாக அவர்கள் பெற்றோர்களுக்கு அறிவித்து தடுத்து நிறுத்த துணை புரியுங்கள்.

Image may contain: 1 person, standingImage may contain: one or more people

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (12.03.2028)

மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி  செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். 

ரிஷபம்: காலை 7.30 மணிமுதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்கமுடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும்.உறவினர், நண்பர்களால் வியாபாரத்தில்வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்:  ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கக் கூடும். அண்டை, அயலார் சிலரின்செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

கடகம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம்முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். வியாபாரத்தில்வாடிக்கையாளர்களை கவர சலுகைகளைஅறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


சிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் புது முயற்சியை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும்  நாள்.  

கன்னி: கணவன்-மனை விக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புது  அத்தியாயம் தொடங்கும் நாள்.   

துலாம்:  காலை 7.30 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு: இதமானப் பேச்சால்எல்லோரையும் கவருவீர்கள். பழைய உறவினர், நண்பர்களுடன்  மனம்  விட்டு  பேசிமகிழ்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து  உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலைமுடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

மீனம்: தைரியமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

திங்கள், 11 மார்ச், 2019

எனது மனைவியுடன் படுத்திருந்து எனக்கு வீடீயோ அனுப்பினான்!! கிளிநொச்சி முகாமையாளரைக் கொன்ற கணவன் வாக்குமூலம்!!

காப்புறுதி நிறுவன முகாமையாளரைக் கொலை செய்யப்போகின்றேன் என சந்தேகநபர் தனது மனைவியிடம் முதல்நாள் தெரிவித்துவிட்டே மறுநாள் அவரை கொலை செய்தார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார்.

வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு  அந்த நபரை வெட்டியுள்ளார்.

சம்பவத்தையடுத்து கொலை செய்தார் என்று தேடப்பட்ட சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்குத் திரும்பும்வேளை விமான நிலையப் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துவந்த பொலிஸார்,  கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேகநபரை மேலும் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கேட்டனர். நீதிமன்று அனுமதித்தது.

அதனடிப்படையில் இரண்டு நாள்கள் தடுத்துவைத்து சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், அவரது அலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.

“எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிறேமரமணன் எனது நீண்டநாள் நண்பர். அதனால் எனது மனைவியை அவரது காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்ற அனுப்பிவைத்தேன்.

கிளிநொச்சியில் சீரான தொழில் வாய்ப்புக் கிடைக்காத்தால் பகறின் நாட்டுக்கு தொழில் தேடிச் சென்றுவிட்டேன். நான் வெளிநாடு சென்றதும் எனது மனைவியுடன் பிறேமரமணன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார்.

அவர்களது தொடர்பு அண்மைக்காலமாக மிகவும் நெருக்கமடைந்தது. எனது மனைவியுடன் தகாத உறவில் இருக்கும் ஒளிப்படங்கள், காணொலிகளை எனக்கு அனுப்பிவைத்து பிறேமரமணன் என்னை மிகவும் மன உளைச்சலுக்குள்ளாக்கினார். எனது நண்பனான அவரை நான் பல தடவைகள் எச்சரித்தும் மன்றாடியும் பேசியிருந்தேன்.

எனது குடும்பத்தை சீரழிக்காதே, மனைவியை விட்டு விலகிவிடு என்று அவரிடம் கடைசிவரைக்கும் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் என்னை கோபமூட்டும் வகையிலான ஒளிப்படங்கள்,காணொலிகள், குரல்பதிவுகளைத் தொடர்ச்சியாக அனுப்பிவைத்தார்.

அதனால் நாடு திரும்பிய நான், பிரேமரமணனை சந்திக்கப் போகின்றேன் என எனது மனைவிக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினேன்” என்று சந்தேகநபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் சந்தேகநபரின் மனைவி, அக்கராயன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, தனது கணவர் பிறேமரமணனைக் கொலை செய்யப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார். எனினும் கொலை இடம்பெற்ற பின்னர் தான் அவ்வாறு சொல்லவில்லை என்கிறார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொலை செய்யப்பட்டவரால் சந்தேகநபருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஒளிப்படங்கள், காணொலிகள், குரல்பதிவுகள் சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன
என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சற்று முன் யாழில் விபத்து!! ஆட்டோச் சாரதி படுகாயம்!! (Photos)

உரும்பிராய் ஊடாக மருதனார்மடம் செல்லும் பிரதான வீதியில் கோர விபத்து..

உரும்பிராயிலிருந்து மருதனார் மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகத்துடன் எதிரே வந்த ஆட்டோ முந்திச் செல்ல முற்பட்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஆட்டோ சாரதி மோசமான நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் டிப்பர் சாரதி தப்பியோடி விட்டதாகவும் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



சீட்டுக்காசு 2000 ரூபாய் கொடுக்காத விரக்தி!! மட்டக்களப்பில்19 வயது இளம் தாய் துாக்கில் (Photos)

மட்டக்களப்பில் யுத்தகாலத்தில் கிராமபுறங்களில் ஆயுதக்குழுக்கள் ஆட்சேர்ப்பு பீதியில் சிறுவயதில் திருமணம் முடித்தார்கள் அப்பொழுது ஏற்றுக்கொள்ள கூடியதாகயிருந்தது.இப்பொழுதும் சிறுவயது திருமணங்கள் மலிந்து காணப்படுவது குறைந்த பாடில்லை.அதிகமாக சிறுவயது திருமணங்கள் செங்கலடி பிரதேசத்திலுள்ள மயிலவெட்டுவான் ,பாலர்சேனை,ஆயித்தியமலை ,ஈரலகுளம்,வாகனேரி,உறுகாமம் ,பகுதிகளிலே உள்ளது,இப்பகுதி மருத்துவ மாது கர்ப்பணி கிளினிக் நிலையங்களில் உள்ள தரவுகளில் காணலாம்,
எவளவுக்கு சிறுவயது திருமணம் நடைபெறுகின்றதோ அவளவுக்கு விவாகரத்தும் தற்கொலையும் நடைபெறுகின்றது.உரிய வயதில் குடும்ப சுமையை சமாளிக்கு பக்குவம் ,கணவன் மனைவியிடையான புரிந்துணர்வு அற்று காணப்படுகின்றது.
இதனால்தான் இன்று மற்றுமொரு தற்கொலை சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மாவடிவேம்பில் சம்பவம்.

மேசன் தொழில் செய்துவரும் முரளீதரன் என்ற இளைஞன்,
தனது 17 ஆவது வயதிலும், ஜானு என்ற யுவதி தனது ஆவது 15 வயதிலும் திருமணம் முடித்து தற்போது மூன்று வயதுடைய பெண் குழந்தையொன்றுக்கு பெற்றோராகிய நிலையில்,

குடும்பச்சுமைகளை எவ்வாறு சமாளிப்பதென்றே தெரியாத பருவத்தில், சுமைகளை தலையில் தூக்கி வைத்ததால் ஏற்பட்ட வினையே தற்கொலை.

கணவனின் வருமானத்துக்கேற்ப செலவினை வகுக்க தெரியாத பருவத்தில்,
ஆடைக் கொள்வனவு முதல் இன்னோரன்ன தேவைகளை தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி ஜானு,
மாதாந்தம் 2000 /=, 200/=என சீட்டுக்காசி கட்டுவதற்கும் சேர்ந்ததால், நாளடைவில் இவற்றுக்கு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட தற்கொலைக்கு சென்றிருக்கிறார் என கணவர் முரளிதரன் தெரிவித்தார்.

, மணிவாசகர் வீதி, மாவடிவேம்பு -02,ஐ சேர்ந்த, சிவானந்தம் ஜானு (19) என்ற இளம் தாயே இவ்வாறு.
இன்று (10 /03) காலை 10.00 மணியளவில் தனது வீட்டின் படுக்கையறை வளையில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்தவராவார்.

Image may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people and people sittingImage may contain: one or more peopleImage may contain: 1 person, smiling, outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoor

யாழ் பொன்னாலை ஐஸ் தொழிற்சாலைக்கு பன்னாலையில் நீர் எடுப்பதற்கு தடை


 நீர்கொழும்பில் உள்ள கம்பனி ஒன்றினால் பொன்னாலையில் இயக்கப்படும் ஐஸ் தொழிற்சாலைக்கு அளவெட்டி - பன்னாலையில் தண்ணீர் எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பிரதேச மக்களாலும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுப்பதால் தமது பிரதேச நன்னீர் வளம் பாதிக்கப்படும் என்பதாலேயே குறித்த நிறுவனம் தண்ணீர் எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நீர்கொழும்பில் உள்ள சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரின் கம்பனியின் பெயரால் பொன்னாலைச் சந்தியில் ஐஸ் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு ஐஸ் உற்பத்தி இடம்பெற்று வருகின்றது. இதற்காக வலி.மேற்கு மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை எல்லைக்குள் உள்ள கிணறுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான லீற்றர் நீர் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில், அளவெட்டி – பன்னாலை – நகுலேஸ்வரம் வீதியில் மேற்படி கம்பனியின் பெயரில் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் குழாய்க் கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு சமீபமாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் மலசலகூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தங்குவதற்கு ஏற்ற வகையில் சிறிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பவுஸர் வாகனம் சென்று வருவதற்கு ஏதுவாக அங்கு புதிய தார் வீதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கம்பனியின் செலவிலேயே இந்த வீதியும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இம்மாதம் 3 ஆம் திகதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி குழாய்க் கிணற்றில் இருந்த முதன் முதலாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பிரதேச மக்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து அவர்களும் மக்களும் இணைந்து 5 ஆம் திகதி தண்ணீர் எடுக்க முற்பட்டபோது நேரடியாக அங்கு சென்று நீர் எடுப்பதைத் தடுத்து நிறுத்தினர். அத்துடன், அவர்களின் ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டன. இதன்போதே அவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்தது.

இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கும் பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களும் அங்கு சென்று விடயங்கள் தொடர்பாகக் கேட்டறிந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

நிலத்தடி நீர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இனிமேல் அங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டாம் என குறித்த நபர்களுக்கு மக்களால் அறிவுறுத்தப்பட்டது.

Image may contain: one or more people, tree and outdoorImage may contain: 3 people, people standing, tree, outdoor and natureImage may contain: 5 people, people standing and outdoorImage may contain: one or more people, tree, outdoor and natureImage may contain: 4 people, people standing, outdoor and nature

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (11.03.2028)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில்  வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்: கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் புதிய வர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.  உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்துபெருமைப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

கடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உற வினர், நண்பர்களின் பாச மான விசாரிப்புகள் ஆறுதலாக இருக் கும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாக னத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் திடீர்திடீரென்று எதை யோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவி செய்வ தாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை  வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச் சியும், நண்பர்களால் ஆதாய மும் உண்டாகும். வியாபா ரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோ கத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட் டும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.  உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: தன்னிச்சையாக சில  முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்: குடும்பத்தில் சந் தோஷம் நிலைக்கும். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். எதிர் பாராத சந்திப்பு நிகழும். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்ப டுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி கள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

ஞாயிறு, 10 மார்ச், 2019

பூநகரிக் காட்டுக்குள் துப்பாக்கிச் சூட்டில் இராணுவச் சிப்பாய் பலி!!

வன்னிக் காட்டுக்குள் கட்­டுத் துவக்­கில் அகப்பட்டு படு காயமடைந்த இரா­ணு­வ சிப்­பாய் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்­பில் கிளிநொச்சி பூந­க­ரிப் பொலி­ஸார் தெரி­விக்கையில்,

பூந­கரி இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றும் இரா­ணு­வச் சிப்­பாய் ஒரு­வர் நேற்று மாலை காட்­டுக்­குச் சென்றவேளை அங்கே பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத் துவக்­கில் அகப்­பட்­டுள்­ளார்.

இதனால் இரா­ணு­வச் சிப்­பா­யின் ஒரு காலில் குண்டு துளைத்­து அவர் படுகாயமடைந்தார். படு­கா­ய­ம­டைந்த இரா­ணு­வச் சிப்­பாய் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளதாக தெரிவித்தனர்.




கஞ்சா போதையில் இளைஞனை கசக்கிப் பிழிந்த யாழ்ப்பாணப் பொலிஸ்!! நடந்தது என்ன?

மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையில் இருந்த பொலிஸார் சந்தேக நபர் என்ற அடிப்படையில் இளைஞன் ஒருவரை கைது செத்து விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார். இதில் இளைஞனை தாக்கிய பொலிஸார் மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்தாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.



 

பதுளையில் 17 வயது யுவதியைக் கர்ப்பமாக்கிய 57 வயதுக் கிழவன் !!

பதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுளை பிரதேசத்தை சேர்ந்த பிம்பிசார திஸாநாயக்க என்ற 57 வயதான நபரே கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதியை பலவந்தப்படுத்தி பல முறை இந்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளார். அவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளான குறித்த யுவதி தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இதற்கு முன்னர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்று உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானுக்கு இவ்வளவு ரசிகைகளா?? மட்டக்களப்பில் பிள்ளையானின் ரசிகைகளின் திருவிளையாடல் (Photos)

கிழக்கினை மீட்போம் என்னும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஏற்பாடுசெய்த சர்வதேச மகளிர் தினம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை மட்டக்களப்பு விஜயா திரையரங்கு முன்பாக மாபெரும் மகளிர் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியானது மட்டக்களப்பு நகர் ஊடாக அரசடி சந்தியை வந்தடைந்து அரசடி சந்தியில் உள்ள தேவநாயகம் மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த கிழக்கை மீட்போம் என்னும் தலைப்பிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்ரவர்த்தி,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி பாரதி கெனடி,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,சர்வதேச தொடர்பாளர் துரைநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச மகளிர் தின பிரகடனம் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகரினால் வாசிக்கப்பட்டதுடன் மகளிர் தினம் தொடர்பான விசேட உரைகளும் நடைபெற்றன.





































யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.