வெள்ளி, 8 மார்ச், 2019

நெடுங்கேணி சிறுவன் கடத்தல் விவகாரம் சிறுவனின் தாயாரின் திருவிளையாடலாம்!! (Photos)

தந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பியமைக்கான 35 இலட்சம் ரூபா தரகுப் பணத்தை வழங்குமாறு 8 வயது மகனை வெளிநாட்டு முகவர் ஒருவரின் தரப்பினர் அழைத்துச் சென்றனர் என்று
தெரிவிக்கப்பட்டது.

“ஆஸ்திரேலியாவில் உள்ள தந்தைக்கு வதிவிட விசா கிடைப்பதற்காக சிறுவனின் தாயாரால் மகன் கடத்தப்பட்டதாக உண்மைக்குப் புறம்பாக முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் சிறுவனின் தாயார் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்படார்” என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டதாக முறைப்பாடு
வழங்கப்பட்டுள்ளது.

“சிறுவன் நேற்றுமுன்தினம் மாலை  தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு  சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.

” இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை” என்று சிறுவனின் தாயரால் நேற்றுக் காலை நெடுங்கேணிப் பொலிஸ்
நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

சிறுவனை சிறுவனின் தந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த  35 இலட்சம் ரூபா தரகுப் பணத்தைத் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன்,  கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசினார்.

இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டது” என்றும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுவன் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார் என்று கண்டறிப்பட்டது. சிறுவன் பணம் கேட்டுக் கடத்தப்பட்டதாக முறைப்பாட்டை வழங்கி அதன் ஊடாக பொலிஸ் அறிக்கையைப் பெற்று ஆஸ்திரேலியாவில் உள்ள தந்தைக்கு வதிவிட விசா அனுமதி பெற்றுக்கொள்வதற்காக தாயார் முயற்சித்தார் என்பது தெரியவந்த்து.

அதனால் சிறுவனின் தாயார் எச்சரிக்கப்படு விடுவிக்கப்பட்டார்” என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.