கிளிநொச்சி புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தின் ஊடாக கடந்த 2017ம் 2018ம் ஆண்டுக்கான செய்து மானியக் கொடுப்பனவுகளை பெற்றுள்ளது தொடர்பில் கமநலசேவை நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அம்பலமாகியது.

கிளிநொச்சி புளியம்பொக்;கணை கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள நாகேந்திரபுரம் கமக்கார அமைப்பி;ல் கடந்த 2017, 2018 காலப்பகுதியில் வழங்கப்பட்ட மானிய உரத்திற்கான கொடுப்பனவுகளில் அரச உத்தியோகத்தர்கள் பலர் குறித்த பிரதேசத்தில் எந்தவிதமான பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளாது தவறான பதிவுகளை மேற்கொண்டு இலட்சக்கணக்கான நிதிகளை முறைகேடாகப் பெற்றுள்ளனர். அதாவது, குறித்த காலபோகத்தின் போது பயிர்ச்செய்;கை மேற்கொள்ளாத அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஆறு பேர் தலா இருபத்தி ஐயாயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினை மானிய உரக்கொடுப்பனவாக பெற்றுள்ளனர்.

 ஆனால், இக்காலப்;பகுதியில் குறித்த பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பலருக்கு மானிய உரத்திற்கான கொடுப்பனவுகளோ மானிய உரங்களோ வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில், கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி காலை இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக்கலந்துரையாடலில் சமுகமாகியிருந்த ஊழல் மோசடியில் ஈடுபட்ட குறித்த அரச அதிகாரிகள் மேற்படி காலபோக செய்கை மேறகொள்வதற்கு தான் தலா ஐந்து ஏக்கர் காணி வீதம் இந்த அதிகாரிகளுக்கு வழங்கியதாக விவசாயி ஒருவர் தெரிவித்திருந்தார். இதனை கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள், ஏற்றுக்;கொண்டு அதனை நியாயப்படுத்தினர்.

இதனையடுத்து, தகவல் அறியும் உரிமைச்;சட்டம்ஊடாகப்பெறப்பட்ட தகவலின் படி அதகாரிகளுக்கு காணி வழங்கியதாகச் சொல்லப்படும் விவசாயிக்கு, ஒரு ஏக்;கர் வயல்காணி மாத்திரமே உள்ளது என்றும் இதற்கான பதிவு தற்காலிக வயல் காணி இடாப்பில் பதிவிடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளதுடன், இவர்கள் நியாயப்படுத்திய விவசாயிக்கு ஒரு ஏக்கர் காணி தவிர வேறு காணி இல்லை என்பது ஆதார பூர்வமாக நிருபனமாகியுள்ளது. இதேவேளை குறித்த மானியஉரத்திற்கான கொடுப்பனவுகளில் கமக்கார அமைப்பு மற்றும் அதிகாரிகள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் நாகேந்;திரபுரம் கமக்கார அமைப்பின் உபசெயலாளர் அவர்களால் வடமாகாண ஆளுனர் அவர்களுக்கும் விவசாய அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் குறித்த சம்பவம் தொடர்பில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.