செவ்வாய், 12 மார்ச், 2019

கிளிநொச்சியில் இரணைமடு குளத்தினுாடாக இம்முறை அதிகளவில் சிறுபோகம்!!


கிளிநொச்சியில் இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது 14,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதைப்பு திகதி, நீர் விநியோக திகதி, கால்நடை கடடுப்பாட்டு திகதி என்பன அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கூட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே வேளை கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர்  இம்முறையே அதிக அளவான சிறுபோக நெற்செய்கை பல ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.