வெள்ளி, 1 மார்ச், 2019

பெண் பொலிசாரும் பல்கலை மாணவர்களும்!! மனோவின் திருவிளையாடல் புராணம்!!

<இதயம் சிலிர்த்ததா? இரு கண்களை பார்த்து...>
இந்த நொடியில் என் மனதில்… (01/03/19)
சமீபத்தில் ஒரு பெரும் போராட்டத்துக்குள் நடந்த ஒரு சிறு சம்பவத்தை நான் ரசித்தேன். பின் மனம் விட்டு சிரித்தேன்.
தினந்தோறும் நான் சந்திக்கும் என் பொது வாழ்வு நெருக்கடிகளிலிருந்து எனை மீட்டு சமநிலைக்கு கொணருவது என் கூடப்பிறந்த எனக்குள்ளே வாழும் ரசிகனும், நகைச்சுவை உணர்வாளனும்தான்!
பத்தரமுல்லையிலிருந்து கொழும்பு நோக்கி ஆயிரம் இளம் மாணவர்களின் போராட்ட நடை பவனி, பதாகைகள், முஷ்டியை உயர்த்திய பெரும் புரட்சிகோஷங்களுடன் மாநகருக்குள் நுழைகிறது. ஒரு புள்ளியை கடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. அங்கே பொலிஸ் நீரடிப்பு, கண்ணீர் புகை வண்டிகள் காத்திருக்கின்றன.
ரசனையுள்ள ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவன் அல்லது சிலர் (என்னைப்போல் ரசிகன்ஸ்!) தீர்மானித்து, அழகிய இளம் பெண் போலீசாரை முதல் சுற்று மனித தடுப்பு சுவராக, பெரும்பாலும் ஆண் “மாணவன்களை” கொண்ட மாணவர் படைக்கு எதிராக நிறுத்துகிறார்கள்.
வேகமாக வந்த நம்ம அழகிய இளம் பசங்கள், நின்று திகைத்து, பின் சுதாகரித்துகொண்டு, பெண் போலீசாரை கிண்டல் செய்கிறார்கள். “அடேய், பெண்களை முன்னாலே நிறுத்து விட்டு ஒளிந்து நிற்கும் பொட்டை பசங்களா” என ஆண் அதிகாரிகளை நோக்கி கத்துகிறார்கள். நன்றாக பயிற்சியளிக்கப்பட்ட நம்ம பெண் பொலிஸ் அழகிகள் அசராமல் புன்னகையுடன் அமைதியாக நிற்கிறார்கள்.
இதில், ஒரு போட்டோவும், காணொளியும் சமூக ஊடகங்களில் வைரல் ஆயின. ஒரு அழகிய இளம் ஆண் போராளி, மிக நெருக்கத்தில் ஒரு அழகிய பொலிஸ் பெண்ணை பார்க்கிறான். அந்த கண்களில் போராட்ட கோபமோ அல்லது காதலோ, காமமோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை.. ஆனால், ஒரு “மயக்கம்” தெரிந்தது. அவனை மயக்கிய அந்த குறிப்பிட்ட பொலிஸ் மோகினியின் முகமும், கண்களும் சரியாக தெரியவில்லை.
முகம் தெரிந்த எல்லா பெண் போலீசார் முகங்களிலும், பொலிஸ் இறுக்கம் தெரியவில்லை. மாறாக “நாணம்” தெரிந்தது.
அந்த காணொளிக்கு பின்னணியாக சுசன் & அஷந்தியின் “ஹித ஹிரி வெடுனாதோ! எஸ் தெக தெகலா!” (இதயம் சிலிர்த்ததா? இரு கண்களை பார்த்து..) என்ற பாடலை சேர்த்துள்ளார்கள். இந்த காணொளியை எங்கோ வட்ஸப்பில் கண்டேன். இப்போ காணோம். எவராவது ரசிகன்ஸ்/ரசிகைஸ் கண்டால், அனுப்புங்கள்!
இந்த போராட்டத்துக்கு கடைசியில் என்ன ஆனது? இது என்ன போராட்டம்? என்பதெல்லாம் வேறு விஷயம். அந்த பையன் அதன்பிறகு அந்த பெண்ணை சந்திப்பானோ, அல்லது இனி ஒருநாளும் அவர்கள் சந்திக்க வாய்ப்பு ஏற்பட போவதில்லையோ, இதெல்லாம் எனக்கு பொருட்டில்லை.
எம் ஒவ்வொருவர் வாழ்விலும், இப்படி மயக்கம் தரும் “மோகினிகளும், மோகனன்களும், நாணன்களும், நாணிகளும்” வந்து போவார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு நொடியையும் ரசிக்க, பிறகு சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை அவ்வளவு மோசமானதல்ல, எனத்தெரியும்.
போராளிகளுக்கும் மயக்கமும், காதலும் வருகின்றன. உலகை உலுக்கிய போராளிகளுக்கும் காதல் வந்தது. காதலுக்கு முன் ரசனை இருந்தது. நம்மூரிலும் இருந்ததே! வந்ததே!
இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாழ்க்கையை எப்போதும் கரடுமுரடாக மாத்திரமே பார்க்கனும் என்றில்லை.
நான் ஒரு ரசிகன். வாசகன். நான் ரசித்து, வாசித்த “அகல் விளக்கு” நாவல் வரிகளைப்பற்றி எழுதினால், அந்த ரசனையையும் புரிந்துக்கொள்ள தெரியாமல், “இதுதான், இப்போ முக்கியமா” என கேட்கும் அல்லது “எவ்வளவு பேர் செருப்பில்லாமல் நடக்கிறார்கள்” என சம்பந்தமே இல்லாமல் பேசும் “கற்பூர வாசனை தெரியாத ஜந்துகளும்” இங்கே இருக்கின்றார்கள்தான்.
இவர்களுக்கு நான் சொல்வது, இந்த “மயக்கங்கள்” ஒருபோதும் எங்கள் கடமைகளை செய்வதில் இருந்து என்னை/எம்மை தடுத்து நிறுத்தாது. மாறாக, ஒவ்வொரு முறையும், வாழ்க்கையை ரசிக்க செய்து, வாய்விட்டு சிரிக்க செய்து, எம்மை சிலிர்த்து எழச்செய்து, “ரிப்ரெஷ்” செய்கின்றன.
ஆகவே, ரசிக்க+சிரிக்க, கற்றுக்கொள்ளுங்கள். கற்றவர்கள், கல்லாதவர்களுக்கு கற்றுக்கொள்ளுங்கள்.

 நன்றி
மனோகணேசன் முகப்புத்தகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.