காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து 13 மற்­றும் 14 வய­துச் சிறு­மி­களை பாலி­யல் துஷ்பிரயோகத்துக்கு உள்­ளாக்­கிய 3 இளை­ஞர்­களை சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­துள்­ள­தாக சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது,

யாழ்ப்பாணம் சுன்­னா­கம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 14 வய­துச் சிறு­மி­யைக் காண­வில்லை என்று அவ­ரது தாயார் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.மறு நாள் சிறுமி வீதி­யில் சென்­ற­தைத் தயார் கண்­டுள்­ளார்.இந்நிலையில், சிறு­மியை பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­தி­னார். அவரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து, தாவ­டி­யைச் சேர்ந்த 17 வயது இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யமை தெரிய வந்­தது.சிறு­மி­யின் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் இளை­ஞ­னைக் கைது செய்­துள்­ளோம்.

இந்நிலையில், கடந்த 24ஆம் திகதி மற்றுறொரு 13வய­துச் சிறுமி உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்று இரவு தாம­த­மாகி வந்­துள்­ளார். அவ­ரி­டம் தாயார் விசா­ரித்­த­போது, சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 18 வயது இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

தாயார் முறைப்­பாடு செய்­தார். சிறு­மி­யி­டம் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட வாக்­கு­மூ­லத்­துக்கு அமை­வாக 18 வய­து­டைய இளை­ஞ­னைக் கைது செய்­தோம்.இதே­வேளை, குறித்த சிறு­மியை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 21 வய­து­டைய இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளதாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரிவியவந்தது.இத­னை­ய­டுத்து குறித்த இளை­ஞ­னை­யும் கைது செய்­துள்­ளோம் என்று சுன்­னா­கம் பொலி­ஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலி­ஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.