கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை தந்தை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த  24-02-2019 அன்று தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுவருவதாக தெரிவித்து சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தந்தை தெரிவித்துள்ளார்.நிலையத்தில் முறைப்பாடு செய்த தந்தை மகன் தொடர்பில் தகவலறிந்தால் தன்னுடைய தொலைபேசிக்கு அறியத் தருமாறும் தயவுடன் கோரி நிற்கின்றார்