126 பேரைப் பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி தனது 87 வயதில் காலமானார். யாழ்ப்பாணம் குடமியன் வரணியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பு பாக்கியம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், கொள்ளுப்பிள்ளைகள் ஆகியோரைப் பரம்பரையாகக் கொண்டவர். இவருக்கு 12 பிள்ளைகளும், 52 பேரப்பிள்ளைகளும், 61 பூட்டப் பிள்ளைகளும், 1 கொள்ளுப் பிள்ளையும் உள்ளனர்.