இந்தியக் கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக இந்திய கடலோர காவல்படையினரால் கைதாகியவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு பெரியகடற்க்கரையைச் சேர்ந்தவர்கள்,

இவர்களை நேற்று முதல் காணவில்லை என உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று இந்தியா தமிழகத்தில் இருந்து தொலைபேசி மூலமாக தமது இருப்பை உறுதி செய்துள்ளனர்.

சிவலிங்கம் மோகனராசா மற்றும் ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே கைதாகியுள்ளனர்.

மேலும் வடமராட்சியில் இருந்து இந்தியாவிற்கு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு செல்வதில்லை என்றும் போதை பொருள் கடத்தல் கும்பல் மட்டுமே இந்தியா கடல் எல்லைக்குள் நுழைவதகவும் தெரிவிக்கும் மக்கள்.
வடமராட்சி பகுதியில் பெருமளவில் கஞ்சா ,மற்றும் போதை பொருள் தாராளமாக இந்தியாவில் இருந்து கடத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் .