வெள்ளி, 1 மார்ச், 2019

கொழும்பு, வெள்ளவத்தை மக்களுக்கு எச்சரிக்கை!! நடந்தது என்ன?

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகர்கள் போன்று கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளைகள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.

இந்த கும்பலின் செயற்பாடு காரணமாக கொழும்பு வாழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

யாசகர் போன்று செயற்பட்டு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்து பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறிக்க முயற்சித்த கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியின் பதிவு இலக்கத்தை அடிப்படையாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி கொள்ளையில் ஈடுபட்ட இடத்தில் இருந்து சற்று தூரத்தில் விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்ட நபர் பம்பலப்பிட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் யாசகர் என விசாரணகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட யாசகர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.