யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் பொலிஸாருக்கு எதிராக அதிகளவா ன குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், கூட்டத்திலிருந்து எழுந்து வெளியேற முயற் சித்த பொலிஸாரை யாழ்.மாவட்ட செயலா் தடுத்து நிறுத்திய நிலையில், தொடா்ந்து ம் பொலிஸாா் சபையில் இருந்துள்ளனா்.

யாழ். மாவட்டத்தின் தற்போதைய சிவில் நிலமை தொடர்பில் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தலமையில் நேற்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது . இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் இணுவிலில் 2019-01-15 ல் இடம்பெற்ற விபத்தில்

இரு முச்சக்கர வண்டிகள் மோதிய விபத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். அந்த குடும்பமே படுகாயமடைந்தது. அந்த விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டியை செ லுத்தியவரும் ஓர் பொலிஸ் உத்தியோகத்தர். இருப்பினும் மறுநாளே பிணையில் விடப்பட்டுள்ளாா்.

ஆனால் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரியை விளக்க மறியலில் வைக்க வேண்டும் என நீதிமன்றிற்கு எழுத்தில் வழங்கி விட்டு பிணை வழங்க ஆட்சேபனையும் இல்லை. என பொலிசார் கூறியதனால் நாகேஸ்வரன் திவாகரன் பிணையில் உடனடியாகவே வெளியில் வந்துவிட்டார்.

அதில் பொலிசாரான திவாகரன் கவவனயீனமாக முச்சக்கர வண்டியை செலுத்தி வந்தார். எனவே 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு கோருகின்றேன். என் றுதான் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019-01-17 பிணை வழங்கப்பட்டு விட்டது. இதனால் அங்கே பொலிசார் நேர்த்தியாக செயல்படவில்லை.

என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தவராசா சுட்டிக் காட்டினார். நாம் அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டினோம். இருப்பினும் பிணை வழங்கியது நீதிமன்றம் . எனவே இது தொடர்பில் நாம் கருத்து கூற முடியாது எனப் பொலிசார் கூறியபோது

நீதிமன்ற அறிக்கையில் பிணைவழங்க ஆட்சேபணை இல்லை என பொலிசார் தெ வித்தனர் . என நீதிமன்ற அறிக்கையில் உள்ளதே என பி அறிக்கையை காண்பித்தார். இதேநேரம் கடந்த 2019-01-14 அன்று பிரதமர் யாழிற்கு வந்த சமயம் உலங்கு வானூர்ந்தியில் வந்து இறங்கி

வாகனத்தில் பயணித்த சமயம் பொலிசார் சமிக்கை எழுப்பியவாறு சென்றனர் . நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. எனச் சுட்டிக்காட்டிய சமயம் அதற்கு நீதவான் முறையிடவில்லையென ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதிலளித்தார்.

இதேபோன்று யாழ்.ஆரியகுளம் நாகவிகாரையில் ஓர் நிகழ்வெனில் வைத்தியசா லைவரை ஒலி பெருக்கி பொருத்தப்பட்டு வைத்தியசாலை நோயாளர்களிற்கு இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும். என மீண்டும் தவராசா கோரினார்.

இதற்குப் பதிலளித்த பொலிசார் எல்லா ஆலயங்களும் சட்டத்தை மீறுகின்றனர் கோயில் , பள்ளிவாசல்களில் ஒலி எழுப்பப்படுகின்றது. இருப்பினும் இது தொடர்பில் ஏன் வைத்தியசாலைப் பணிப்பாளர் முறையிடவில்லை. கோயில்களிலும் அனுமதி இன்றி ஒலி பெருக்கி பாவிக்க விடுகின்றோம்.

எனப் பொலிசாரால் தெரிவிக்கப்பட்டது. குறித்த விடயம் மிகவும் சர்ச்சையாக சென்ற சமயம் குறித்த கூட்டமானது பொலிசிற்கு எதிராக குற்றம் சொல்லுவதற்கு கூட்டிய கூட்டம் போன்று இடம்பெறுவதனால் கூட்டத்தில் இருந்து வெளியேறுகின்றோம். என பொலிசார் கூறினர்.

இருப்பினும் விடயம் எழுப்புவது சர்ச்சைக்கல்ல தீர்வை எட்டவே அதனால் விடயத்தை மட்டும் சுட்டிக்காட்டுமாறு மாவட்டச் செயலாளர் கூறி விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதேநேரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகின்றது.

ஆனால் ஒருவர்கூட இதுவரை முறைப்பாடு பதியவில்லை.என அத்தியட்சகர் கணே சநாதன் தெரிவித்தார். யாழ். நகர்ப் பகுதியில் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை இடம்பெறுகின்றது. அதனால் அவ்வாறு விற்பனை செய்யும் இடங்கள் பலவற்றை எம்மால் இனம்காட்ட முடியும் எனவே

அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார். இதேசமயம் இலங்கை முழுவதும் 85 ஆயிரம் பொலிசாரும் 10 ஆயிரம் விசேட அதிரப்படைநினரும் பணியில் உள்ளபோதிலும் ஆளணி போதாது . இதற்காக வடக்கில் பணியாற்ற 850 தமிழ் பொலிசாரை

நியமிக்க அனுமதி கிட்டியுள்ளது. எனவே 2 போன் , பியர் போத்தல் என மோட்டார் சைக்கிள்களில் திரியாமல் வடக்கு இளைஞர்கள் பொலிசில் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்றார்.